The Al Keris. மலாய் படம் விரைவில் வெளிவருகிறது.
The Al Keris. The Malay film is coming out soon.
Date:27 April2026 News By: Selvam sadayan
மலேசிய திரைப்பட துறையில் மிகுந்த அனுபவம் பெற்ற புரட்சி தயாரிப்பாளர் நடிகருமான கெடாவின் மதியழகன் கைவண்ணத்தில் உருவான The Al Keris Hang Tuah எனும் மலாய் படம் வரும் ஜூலை மாதம் 2ஆம் தேதி 2026 அன்று மலேசிய சபா சரவாக் மற்றும் சிங்கப்பூரில் வெளியீடு காணவுள்ளது.
சமூக சேவகர் கலைஞர்களின் காவலன் நன்கொடை நெஞ்சர் Dr சிங்கப்பூர் சின்னையா கூட்டு தயாரிப்பாளராகவும் விக்னேஷ் பிரபு இயக்கத்திலும் பல தொழில் நுட்ப கலைஞர்களின் மேற்பார்வையில் வெளிவருகிறது.
ஒரு வரலாற்றின் பின்னணியில் இன்றையை சூழ்நிலையை கருத்தில் கொண்டு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு கலைஞர்கள் நடித்து திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர்
மலாய்க்காரர்களின் பாரம்பரியம்,அவர்களின் தற்காப்பு கலைகளை இன்றையை மலேசியர்கள் மறந்து விடக் கூடாது என்பதை நினைவுறுத்தும் வகையில் பல புதியை யுத்திகலை கொண்டு சண்டைக் காட்சிகள் நிறைந்த ஒரு வரலாற்றுப் படமாக அமைந்துள்ளதாக தயாரிப்பாளர் குழுவினர் தெரிவித்தனர்.
கடந்த 19.4.26 அன்று சுங்கை பட்டாணி Village Mall பேராங்காடி வளாகத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் போஸ்டர் வெளியிட்டு விழாவில் கலந்துக் கொண்ட கெடா மாநில மந்திரி பெசார் அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார்.
தானும் இப்படத்தில் சிறு வேடத்தில் நடித்திருப்பதையும். மகிழ்ச்சியுடன் தெரிவித்து,இப்படம் அனைவரும் பார்த்து ஆதரவை தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டு வாழ்த்தினார்.



ganapathy







\
